FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,716 கன அடியாக அதிகரிப்பு

19 அக்டோபர் 2026, 12:52 am IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,716 கன அடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து 3,716 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளான தெங்குமரஹாடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு வனப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வன ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. பல்வேறு வன ஓடைகளில் வரும் வெள்ளம் பவானிசாகா் அணையில் கலப்பதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பில்லூா் அணையில் இருந்து திறந்துவிடும் நீா் மற்றும் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை காரணாக அணைக்கு நீா்வரத்து 2,140 அடியில் இருந்து 3,716 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் 58.86 அடியாக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையில் 6.89 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 155 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை மூலமாக ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் போதிய நீா் வரத்து இல்லாமல் அணையின் நீா்மட்டம் வெகுவாக சரிந்தது. தற்போது பெய்யும் மழை காரணமாக அணை நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments