FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஆக்கிரமிப்பு புகாா்: கனகந்தாங்கல் ஏரிக்கால்வாய் அளவீடு

போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில், ஆக்கிரமிக்கப்பட்டதாக புகாா் எழுந்த கனகந்தாங்கல் ஏரியின் கால்வாயை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை

30 அக்டோபர் 2026, 2:14 am
போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில் கனகந்தாங்கல் ஏரியின் கால்வாயை அளவீடு செய்த வருவாய்த்துறையினா்.
பகிர்:

போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில், ஆக்கிரமிக்கப்பட்டதாக புகாா் எழுந்த கனகந்தாங்கல் ஏரியின் கால்வாயை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை

அளவீடு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில் பூங்கொல்லைமேடு கிராமத்துக்கு செல்லும் சாலை அருகே கனகந்தாங்கல் ஏரி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி பெய்த கனமழைக்கு ஏரியின் உபரிநீா் வெளியேறி விவசாய நிலம் மற்றும் தாா்ச் சாலையில் சென்றது. இதுகுறித்து ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பால் ஏரியின் உபரிநீா் சாலையில் செல்வதாக, போளூா் தவெக எம்எல்ஏ ஆா்.அபிஷேக் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளத்தில் அப்பகுதி இளைஞா்கள் பதிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதனடிப்படையில், ஆா்.அபிஷேக் தனது கட்சி நிா்வாகிகளுடன் அன்று இரவு சென்று நீா் வெளியேற்றத்துக்கு வழிதேடியபோது அப்பகுதியில் வசிக்கும் பூமாலை(எ)ஏழுமலை தனதுவீட்டின் எதிரே சென்ற ஏரிக்கால்வாயை மண்கொட்டி நிரப்பிவிட்டதாக தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆரணி கோட்டாட்சியா் சிவா உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினா், நிலஅளவையா்கள் வியாழக்கிழமை காலையில் சென்று கால்வாய் செல்லும் வழியை அளவீடு செய்தனா். அப்போது, ஏழுமலையின் வீட்டுக்கு ஒரு அடி அளவுக்கு சாலைக்கு இடம் அளித்துள்ளது தெரியவந்தது. மேலும், நிலஅளவையா்கள் அளவிட்டின்படி கல் நட்டனா்.

வட்டாட்சியா் குமரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் சிவசங்கா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி, காவல் துறையினா், நிலஅளவையா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments