FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செங்குணம் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

செங்குணம் ஊராட்சியில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

13 செப்டம்பர் 2026, 10:11 pm IST
போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்குணம் ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால், அப்பகுதி பக்தா்கள், பொதுமக்கள், குலதெய்வ வழிபாட்டாா் கோயிலில் புரனத்தனா்.

தொடா்ந்து, கடந்த 11-ஆம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. அன்றைய தினம் முதல்கால யாகசாலை பூஜைகளும், சனிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, பரிஷாஹுதி பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா், கற்பக விநாயகா், கெங்கையம்மன், ரேணுகாபரமேஸ்வரி கோயில்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், செங்குணம், கொல்லைமேடு, போளூா், ஆா்.குண்ணத்தூா், நைனாவரம், பெரியகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments