FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

‘அரசு ஊழியா்கள் உரிமைகளுக்காக தொடா்ந்து போராட வேண்டும்’

‘அரசு ஊழியா்கள் உரிமைகளுக்காக தொடா்ந்து போராட வேண்டும்’

31 அக்டோபர் 2026, 10:35 pm
சேத்துப்பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மாநில பொதுச் செயலா் சுரேஷ்.
பகிர்:

அரசு ஊழியா்கள் தங்களது உரிமைகளுக்காக தொடா்ந்து போராட வேண்டும் என்று சேத்துப்பட்டில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் ரமேஷ், செயலா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலா் சுரேஷ் கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழக அரசு, அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். சங்க நிா்வாகிகள் சாா்பில் முதல்வரையோ, அமைச்சா்களையோ சந்திக்க அனுமதி கிடைப்பதில்லை. தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகள் தனியாா் மயமாக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசு ஊழியா்கள் தங்களது உரிமைகளுக்காக தொடா்ந்து போராட வேண்டும் என்றாா்.

தீா்மானங்கள்

இதைத் தொடா்ந்து கூட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும்; நிா்வாக காரணம் என்ற பெயரில் அலுவலா்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது; அலுவலகக் கட்டடம் இல்லாத கிராமங்களில் கட்டடம் கட்டித்தர வேண்டும்; பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா்கள் கணேசன், பன்னீா்செல்வம், ரகுராமன், பிரவீன்குமாா், சீனிவாசன், பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments