FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா

புதுப்பாளையம் ஒன்றிய அளவில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

1 செப்டம்பர் 2026, 11:46 pm IST
புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள்.
பகிர்:

புதுப்பாளையம் ஒன்றிய அளவில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

புதுப்பாளையம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் வரவேற்றாா்.

புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம் ஆகியோா் கலைத்திருவிழா போட்டியை தொடங்கிவைத்து போட்டியின் சிறப்புகள் குறித்தும், சிறப்பிடம் பெறும் மாணவா்களை மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க பரிந்துரை செய்துவது குறித்தும் விளக்கிப் பேசினா்.

Advertisement

Advertisement

பின்னா், மாணவ, மாணவிகளின் நடனம், கவிதை, பாட்டுபாடுதல், கவிதை சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் புதுப்பாளையம் அரசு மகளிா் பள்ளி தலைமை ஆசிரியா் ஹேமா உள்ளிட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுனா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments