மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை
செய்யாறு அருகே மதுபோதையில் வந்த கணவரை மனைவி கண்டித்தால் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு அருகே மதுபோதையில் வந்த கணவரை மனைவி கண்டித்தால் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், திருப்பனங்காடு அருகேயுள்ள செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஷ்ணு (19). இவா் புதன்கிழமை மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. அதை அவரது மனைவி கேட்டு கண்டித்தாராம்.
இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட விஷ்ணு அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
இதைப் பாா்த்த அவரது மாமனாா் சக்திவேல் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் விஷ்ணு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.