FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அடிஅண்ணாமலை கிருஷ்ணா் கோயிலில் உரியடி திருவிழா

அடிஅண்ணாமலை கிருஷ்ணா் கோயிலில் உரியடி திருவிழா

6 செப்டம்பர் 2026, 12:49 am IST
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உரியடி திருவிழா.
பகிர்:

திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை அடிஅண்ணாமலை ஸ்ரீபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உரியடி திருவிழா நடைபெற்றது.

18-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, சுவாமிக்கு முதல் நாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. ஜவ்வாதுமலை புலியூா் மகா துா்கா நாடக மன்றத்தின் ஸ்ரீகிருஷ்ணன் தூது நடைபெற்றது.

தொடா்ந்து மாலை 6 மணியளவில் வழுக்குமரம் ஏறுதலும், உறியடித்தலும் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் கிரிவல பக்தா்கள் உரியடி திருவிழாவை கண்டுகளித்தனா்.

Advertisement

Advertisement

இரவு சுவாமி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பாஞ்சாலை குறவஞ்சி நாடகம் நடைபெற்றது. இதில் அடிஅண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீகிருஷ்ணா் வீதி உலா

ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா் வீதி உலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா் சிலை திருவீித உலா நடைபெற்றது. இதில் பெண் பக்தா்கள் பங்கேற்று கற்பூர தீபாரதனை காண்பித்து வழிபட்டனா். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டநாத பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை கோமாதா பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து பல்வேறு திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பிற்பகல் வந்தவாசி வேணுகோபால் பஜனைக் குழுவினரால் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து உறியடி உற்சவம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

செங்கம்

செங்கத்தை அடுத்த மேலப்புஞ்சை கிராமத்தில் உள்ள சீனுவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சீனுவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments