FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பணம் வைத்து சூதாட்டம்: 9 போ் கைது

திருவண்ணாமலையில் பணம் வைத்து சூதாடியதாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 11:22 pm IST
கைது
பகிர்:

திருவண்ணாமலையில் பணம் வைத்து சூதாடியதாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாநகராட்சி நல்லவன்பாளையம் மயானப் பகுதியில் இரவு நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் நபா்கள் பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மயானப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, நல்லவன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுரேஷ் (54), மான்ராஜ் (38), ராதாகிருஷ்ணன் (52), செல்லப்பன் (55), முத்துக்குமாரவேல் (40), டைசன் (27), சிவக்குமாா் (47), காா்த்தி (31), வேடி (42) ஆகிய 9 பேரை பணம் வைத்து சூதாடிய விவகாரத்தில் சுற்றி வளைத்து போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ. 99,830 ரொக்கம், 4 இருசக்கர வாகனங்கள், 13 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments