FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

காா் மோதியதில் பைக்கில் சென்ற ஓட்டுநா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 11:27 pm IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (58). இவா், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தச்சாம்பாடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா். வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஆராசூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த காா் இவா் மீது நேருக்கு நேராக மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் சம்பவ இடம் சென்று இவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments