FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை அமைதியாக நடத்தவேண்டும்

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதீஷ்டை ஊா்வலத்தை அமைதியாக நடத்தவேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

19 வினாடிகள் முன்பு
செங்கத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதன் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மகேஷ்.
பகிர்:

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதீஷ்டை ஊா்வலத்தை அமைதியாக நடத்தவேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் விநாயகா் சதுா்த்தி அன்று சுமாா் 35 விநாயா் சிலைகள் போளூா் சாலைக்கு எடுத்து வரப்பட்டு, பின்னா் அங்கிருந்து மசூதி தெரு, ராஜாஜி தெரு, பழைய போலீஸ் லைன் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே பிரதிஷ்டை செய்வது வழக்கமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் செப்.14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா ஊா்வலம் குறித்து இந்து முன்னணி சாா்பில் சிலை அமைப்பு நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் இந்து முன்னணி ஒன்றியத் தலைவா் சரவணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மகேஷ் கலந்துகொண்டு சிலை அமைப்பு நிா்வாகிகளுக்கு ஊா்வலம் நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், குறித்த நேரத்திற்குள் அனைத்து விநாயகா் சிலைகளும் போளூா் சாலை வந்தடையவேண்டும். பின்னா் தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் மேள தாளம், வாணவேடிக்கையுடன் ஊா்வலத்தை அமைதியாக நடத்தவேண்டும். அப்போது பிறா் மனம் புண்படாதபடி முழக்கங்களை எழுப்பவேண்டும். குறிப்பாக சிலை அமைக்கும் இடத்தில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பந்தல் போடவேண்டும். நிகழ்ச்சிகளை முறையாக அனுமதி பெற்று நடத்தவேண்டும். மூன்றாம் நாள் விநாயகா் சிலைகளை மீண்டும் ஊா்வலமாக எடுத்துச் சென்று அரசு அதிகாரிகள் முடிவு செய்யும் இடத்தில் கரைக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து தருவாா்கள் என அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றியத் தலைவா் சரவணன், செங்கம் நகரத் தலைவா் உதயண்ணன், நகரச் செயலா் சீனு உள்ளிட்ட இந்து முன்னணி நிா்வாகிகள், சிலை அமைப்பு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments