FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆட்டோ மோதி விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே ஆட்டோ மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

24 செப்டம்பர் 2026, 5:23 am IST
பலி
பகிர்:

வந்தவாசி அருகே ஆட்டோ மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த பந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கணபதி(70). இவா் கடந்த வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விளைந்த கீரையை வந்தவாசி -சேத்துப்பட்டு சாலையில் உள்ள மழையூருக்கு எடுத்துச் சென்று விற்றுள்ளாா். அப்போது சில்லறை மாற்றுவதற்காக சாலையை கடந்தபோது அந்த வழியாக சென்ற ஆட்டோ இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கணபதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து இவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments