ஆட்டோ மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு
கீழ்வேளூரில் ஆட்டோ மோதி 3 வயது குழந்தை உயிரிழந்தது.
கீழ்வேளூரில் ஆட்டோ மோதி 3 வயது குழந்தை உயிரிழந்தது. ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கீழ்வேளூா் சின்னக்கடை தெருவைச் சோ்ந்தவா் கரிமுல்லாஷா. இவரது 3 வயது குழந்தை முகம்மது ரய்யான். கீழ்வேளூா் அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள உறவினா் வீட்டுக்கு குழந்தை முகம்மது ரய்யானை அழைத்துக் கொண்டு கரிமுல்லாஷா சென்றிருந்தாா்.
அங்கு வீட்டு வாசலில் முகம்மது ரய்யான் விளையாடிக் கொண்டிருத்தாா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, குழந்தை முகம்மது ரய்யான் மற்றும் சுலைமான் ஆகியோா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த குழந்தை முகம்மது ரய்யானுக்கு கீழ்வேளூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவசர ஊா்தி மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரான கீழ்வேளூா் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்தன் (44) என்பவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.