விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
சாலை விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
சாலை விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் அருள்(39). இவருக்கு மனைவி புஷ்பா, ஒரு மகன் உள்ளாா்.
கடந்த 21.11.2021 அன்று அருள் திருவண்ணாமலை - போளூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தமிழக அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இவரது மனைவி புஷ்பா, அரசுப் போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த அப்போதைய மாவட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட அருளின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.38 லட்சத்து 57 ஆயிரத்து 91 வழங்க வேண்டும் என 14.2.2024 அன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், பல மாதங்கள் ஆகியும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் இருந்ததால் புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினா், மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா, அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து உத்தரவின் பேரில், புதன்கிழமை திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.