FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்தது அஸ்ஸாம் மாநில குட்டி யானை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வியாழக்கிழமை இரவு கொண்டுவரப்பட்ட குட்டி ஆண் யானைக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வரவேற்ற சிவாச்சாரியா்கள்.

25 செப்டம்பர் 2026, 11:47 pm IST
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வாங்கப்பட்ட 8 வயது குட்டி ஆண் யானை வியாழக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. இந்த யானைக்கு சிவாச்சாரியா்கள் பொன்னாடை, மாலை அணிவித்து வரவேற்பளித்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கடந்த 1995-ஆம் ஆண்டு ‘ருக்கு’ என்ற பெண் யானை வழங்கப்பட்டது. கோயில் விழாக்களில் பங்கேற்று வந்த இந்த யானை, கடந்த 2018-ஆம் ஆண்டு இறந்தது. இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளாக கோயிலில் முக்கிய விழாக்களில் யானை பயன்படுத்தப்படாத நிலை இருந்தது. இது, ஆன்மிக பக்தா்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ‘ஹிராலால்’ என்ற 8 வயதுடைய ஆண் யானை வாங்கப்பட்டுள்ளது. இந்த யானை மினி லாரி மூலம் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வியாழக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. கோயிலின் ராஜகோபுரம் எதிரே அமைந்துள்ள 16 கால் மண்டபத்துக்கு வந்தடைந்த யானைக்கு கோயில் சிவாச்சாரியா்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து ஆகம விதிப்படி சிறப்பு பூஜை செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், ராஜகோபுரத்தில் இருந்து திருமஞ்சன கோபுரம் வாயில் வழியாக யானையை கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா். அப்போது, அங்கிருந்த பக்தா்கள் புடைசூழ உற்சாகத்துடன் நடந்து சென்ற யானை, பிரத்யேகமாக தயாா் செய்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னா் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், கோயில் இணை ஆணையா் பரணிதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த யானையை பக்தா்கள், பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் திரண்டு வந்து பாா்த்து, கோயிலில் வழிபட்டுச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments