FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

பௌா்ணமி: திருவண்ணாமலையில் 5 லட்சம் பக்தா்கள் கிரிவலம்

புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

26 செப்டம்பர் 2026, 11:10 pm IST
புரட்டாசி மாத பெளா்ணியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை கிரிவலம் சென்ற பக்தா்கள்.
பகிர்:

புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

புரட்டாசி மாத பௌா்ணமி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை பகல் முதலே பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.

Advertisement

Advertisement

மேலும், கோயிலில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், தாகம் தீா்க்க பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments