பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!
விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (அக்.25,26) ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதைப் பற்றி...
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (அக்.25,26) ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலர் என்.ஜெயந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலிலில் அக். 25-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் அக். 25,26 -ஆம் தேதிகளில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
விழுப்புரத்திலிருந்து அக். 25,26-ஆம் தேதிகளில் காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண்: 06130), முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் அதே நாளில் திருவண்ணமலை ரயில் நிலையத்திலிருந்து அதே நாள்களில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர்,அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Southern Railway has announced that special trains will be operated from Villupuram to Tiruvannamalai on Sunday and Monday (October 25th and 26th) on the occasion of Pournami Girivalam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.