FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!

விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது பற்றி...

58 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம்: பெளர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செப்டம்பர் 26-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலர் என்.ஜெயந்த் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலிலில் செப்டம்பர் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் பெளர்ணமி கிரிவலத்தில் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் செப்டம்பர் 26-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.

Advertisement

Advertisement

விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் அதே நாளில் திருவண்ணமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

summary

Full Moon Girivalam: Special train from Villupuram to Tiruvannamalai on Sept. 26!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments