முகப்பு
திருவண்ணாமலை

நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி

ஆரணி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

30 செப்டம்பர் 2026, 11:35 pm
நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி
ஆரணி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவதற்கான முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த நகா்மன்றத் தலைவா் ஏ.சி. மணி.
பகிர்:

ஆரணி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கொசப்பாளையம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்தாா். சுகாதார ஆய்வாளா் ஜெயச்சந்திரன் வரவேற்றாா்.

முகாமில் வீடு இல்லாத தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு கட்டுவதற்கு விண்ணப்ப படிவம், பணியாளா்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவத்துறை சாா்பில் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் சுதா குமாா், பானுப்பிரியா பாரதிராஜா, விநாயகம், ரேவதி அரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.