ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் வீட்டில் திருட்டு
நாட்டறம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் திருப்பதி (60). இவர் கடந்த மாதம் 25-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது மகன் நீலவண்ணன் வீட்டில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில், திருப்பதியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், 5 பட்டு புடவைகள், பித்தளை பொருள்களை ஆகியவற்றை திருடி சென்றனர். வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் திருப்பதி, நீலவண்ணன் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர்.
Advertisement
Advertisement
புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
நியாய விலைக் கடையில் திருட்டு
ஆம்பூர் அருகே மின்னூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்தக் கடை வழியாக திங்கள்கிழமை காலை சென்றோர் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்தை பார்த்தனர். தகவலின்பேரில் விற்பனையாளர் அங்கு வந்த பார்த்தபோது, சர்க்கரை, அரிசி, பாமாயில், பருப்பு ஆகியன திருடு போனது தெரிய வந்தது.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வேன் மோதியதில் தொழிலாளி சாவு
ராணிப்பேட்டையை அடுத்த அல்லிகுளம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி மணி (60), வேன் மோதியதில் இறந்தார்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை லாலாப்பேட்டை-அம்மூர் சாலையில் சென்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த வேன் மோதியது. பலத்த காயம் அடைந்த மணி, வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
மாணவி தற்கொலை வழக்கில் இளைஞர் கைது
ஆற்காடு அருகே மாணவி தற்கொலை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு தேவி நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை நசீமா மகள் நபிஷா தஸ்லீம் (21). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்க்கிட்டு கொண்டார். இதில், அவர் இறந்தார்.
புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை பாரதியார் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் கலீம் (22) தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தததும், இதனால் மனமுடைந்த நபிஷா தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, கலீம் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த ஜாசீர் உசேன் மகன் ஜமாலை தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவர் மாயம்
அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை சர்க்கரை தெருவைச் சேர்ந்த மேகநாதன் மகன் அபிகணேஷ் (15), காணாமல் போனார்.
இவர் மங்கலங்கிழார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சென்ற அபிகணேஷ், பள்ளிக்கும் செல்லவில்லை. வீட்டுக்கும் திரும்பி வரவில்லை.
புகாரின் பேரில் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் துரைபாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.