அண்ணனுக்கு கத்திக்குத்து: தம்பி கைது
ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி பழைய காலனியைச் சேர்ந்த தொழிலாளி சின்னவேல் மகன் சிகாமணியை (28) கத்தியால் குத்தியதாக, அவரது தம்பி மணி (26) கைது செய்யப்பட்டார்.
ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி பழைய காலனியைச் சேர்ந்த தொழிலாளி சின்னவேல் மகன் சிகாமணியை (28) கத்தியால் குத்தியதாக, அவரது தம்பி மணி (26) கைது செய்யப்பட்டார்.
சொத்து பிரச்னை தொடர்பாக, சின்னவேலுக்கும், மணிக்கும் வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது சின்னவேலுவை கத்தியால் மணி குத்தும்போது தடுத்த சிகாமணிக்கு காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து, மணியை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.