FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

அம்மூர் அருகே ஊதியம் வழங்கக் கோரி தனியார் காலணி தொழிற்சாலையை ஊழியர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:49 am IST
பகிர்:

அம்மூர் அருகே ஊதியம் வழங்கக் கோரி தனியார் காலணி தொழிற்சாலையை ஊழியர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே கல்மேல்மேல்குப்பம் கிராமத்தில் மேல்விஷாரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலணி தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு அம்மூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும், 10-க்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் ஊதியம் வழங்காமல் அலைக்கழித்து வேலை வாங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. 
இந்நிலையில், தொழிலாளர்கள் புதன்கிழமை தொழிற்சாலை நிர்வாகத்திடம் ஊதியம் வழங்கக் கோரி கேட்டுள்ளனர். ஆனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஊழியர்களை மிரட்டும் தொனியில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த ஊழியர்கள் புதன்கிழமை தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீஸார் ஊழியர்களிடமும், தொழிற்சாலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments