உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருப்பது பற்றி...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 28) மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில் புதிய அரசின் முதல் பட்ஜெட்டான 2026 - 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வருகிற ஆக. 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் விஜய் துறைரீதியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து திமுக கொறடா எ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 28-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
DMK MLAs meeting tomorrow (July 28) under the leadership of Udhayanidhi Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.