FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு!

மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

19 செப்டம்பர் 2026, 7:17 pm IST
மு.க. ஸ்டாலின்
பகிர்:

மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுகவின் முப்பெரும் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும். அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் முப்பெரும் விழாவை திமுக நடத்தி வருகிறது.

இந்த விழாவில் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

முன்னதாக, கடந்த செப். 15 ஆம் தேதியிலேயே முப்பெரும் விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தச் சமயத்தில் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, இவ்விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் மறுதேதி அறிவிக்கப்பட்டு, சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப். 19) மாலை 5 மணியளவில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.

இதில் பேசிய முக ஸ்டாலின், “ஆட்சியமைத்துள்ள கட்சிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கூட கிடைக்கவில்லை.

தமிழகமே அவர்களின் வருகைக்காகக் காத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஆட்சி நடத்தும் கட்சி ஏற்படுத்தி வருகின்றது.

என்னுடைய மிசா கைதை நான் எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை” என்று பேசியுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin has stated that there is no need for him to prove to anyone that he was arrested under MISA.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments