FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாடு என்ற பெயர் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! மு.க. ஸ்டாலின்

தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

13 அக்டோபர் 2026, 10:29 am IST
மு.க. ஸ்டாலின். - படம் - எக்ஸ்
பகிர்:

'தமிழ்நாடு' எனும் பெயருக்காக உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாள்!

Advertisement

Advertisement

வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறுதான் விருதுநகர் தந்த வீரத் தியாகி சங்கரலிங்கனாருடையது.

தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாள்கள் உண்ணாநோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார்.

ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை.

வென்றது திமுக! வந்தார் அண்ணா! நிறைவேற்றினார் தீர்மானத்தை! தமிழ்நாடு தமிழ்நாடானது!

தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன.

ஆனால், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! தமிழ்நாடு வாழ்க!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin post on occasion of death anniversary of the martyr Sankaralinganar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments