மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர் சாவு
ஒடுக்கத்தூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவரும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
ஒடுக்கத்தூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவரும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
ஒடுக்கத்தூர் அருகே ஆசனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (35). இவரது மனைவி இளவரசி (28). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், இளவரசியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அச்சம் காரணமாக அவர் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலின் பேரில் வேப்பங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இளவரசியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.