FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

விசிக பிரமுகர் கொலையை  கண்டித்து சாலை மறியல்

மதுரை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம்பூரில் அக்கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:52 am IST
பகிர்:

மதுரை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம்பூரில் அக்கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் சபரீஸ்வரன் (21) கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் அக்கட்சியின் ஆம்பூர் நகரச் செயலாளர் சக்தி தலைமையில் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் சந்திரன், தொகுதி செயலாளர் வெங்கடேசன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக அக்கட்சியினர் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments