FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் - 10 ஒளிபரப்பு எப்போது?

பிக் பாஸ் - 10 நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து வெளியான தகவல்.

Updated On : 27 ஜூலை 2026, 1:32 pm IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. - படம்: எக்ஸ்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும், மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சியான பிக் பாஸ் 10வது சீசன், எப்போது ஒளிபரப்பு செய்யப்படும் என்று குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.

வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.

Advertisement

Advertisement

விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 10வது சீசன் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இம்முறை பொதுமக்கள் (பிக் பாஸ் காமன் மேன்) பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், கலந்துகொண்டு வெற்றி பெற்றால், நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல்முறையாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்கமொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளன.

மாநில மொழிகளில் மிகவும் பிரபலமான முகங்களே நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி, மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கு மொழியில் நாகர்ஜுனா, கட்டனத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர். இதேபோன்று முதல்முறையாக வங்க மொழியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தொகுத்து வழங்கவுள்ளார்.

summary

Information has emerged regarding when the 10th season of Bigg Boss a popular show aired on Vijay TV will be broadcast.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments