FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரக்கோணத்தில் புதை சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: பாமக அறிவிப்பு

அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்று வரும் புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்காவிட்டால் பாமக சார்பில் போராட்டம்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்று வரும் புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்காவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அரக்கோணம் சுவால்பேட்டையில் நகர பாமக பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு நகரச் செயலர் எம்.கே.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். நிர்வாகி இ.பாலாஜி வரவேற்றார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் க.சரவணன், மாவட்டத் தலைவர் ப.ஜெகந்நாதன், மாநில பேச்சாளர் தம்பிஏழுமலை, மாவட்ட வன்னியர் சங்கச் செயலர் கோ.ஏழுமலை, துணைச் செயலர் சிலம்பம்ராஜ், மாவட்டத் துணைச் செயலர் ஜெ.மணி, நகர அமைப்புச் செயலர் ஜெ.சுந்தரமூர்த்தி, நகர மகளிர் அணி செயலர் கோகிலா உள்ளிட்டோர் பலர் கலந்துக்
கொண்டனர்.
கூட்டத்தில் நகரில் புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்துவது, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments