FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய பொருள்கள் உற்பத்தியில் ராணிப்பேட்டை "பெல்' நிறுவனம்: செயல் இயக்குநர் தகவல்

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் புதிய வர்த்தக தளங்களையும், புதிய பொருள்கள் உற்பத்தியிலும் ஈடுபட உள்ளதாக அதன் செயல்  இயக்குநர் கே.கலைச்செல்வன் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் புதிய வர்த்தக தளங்களையும், புதிய பொருள்கள் உற்பத்தியிலும் ஈடுபட உள்ளதாக அதன் செயல்  இயக்குநர் கே.கலைச்செல்வன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து கே.கலைச்செல்வன் பேசியதாவது:
ராணிப்பேட்டை பெல் நிறுவனம் புதிய வர்த்தக தளங்களையும் உருவாக்கவும், வாயு கந்தக நீக்கி,  கொதிகலன்களுக்கான உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட புதிய உற்பத்தி பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம், எச்என்பிசிஎல், தேசிய அனல் மின் நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களின் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதை அந்த நிறுவனங்கள் பாராட்டியுள்ளன என்றார் அவர்.
தொடர்ந்து, 2017-2018-ஆம் ஆண்டின் சிறப்பான செயல்பாடுகளுக்காக ஊழியர்களுக்கு விருதுகளை  வழங்கிப் பாராட்டினார்.இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. 
விழாவில், பெல் நிறுவன கூடுதல் மேலாளர்கள், ஊழியர்கள், டிஏவி, ராமகிருஷ்ணா பள்ளி மணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments