மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் சாவு
ஆம்பூர் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே சின்னவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (27). இவர், தனது நண்பர்களுடன் பேர்ணாம்பட்டு சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மாச்சம்பட்டு கிராமம் அருகே சென்றபோது நிலைத்தடுமாறி சாலையோர மரத்தில் பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.