FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈஸ்ட் பெங்கால் சாம்பியன்: மோகன் பகான் சாதனை சமன்

135-ஆவது துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.

24 ஆகஸ்ட் 2026, 6:47 am IST
பகிர்:

135-ஆவது துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் 4-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்டை வென்ற அந்த அணி, 17-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலமாக, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் ஆன அதே மோகன் பகானின் சாதனையை சமன் செய்துள்ளது.

இறுதி ஆட்டத்தில் எட்மண்ட் லால் ரிண்டிகா ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து, ஈஸ்ட் பெங்கால் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினாா்.

Advertisement

Advertisement

கடைசியாக இந்தப் போட்டியில் 2004-இல் பட்டம் வென்ற ஈஸ்ட் பெங்கால், 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பை வென்றுள்ளது. இரண்டிலுமே மோகன் பகானை வென்று அந்த அணி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், முதலில் ஈஸ்ட் பெங்கால் கோல் கணக்கைத் தொடங்கியது. 10-ஆவது நிமிஷத்தில் பிபின் சிங் அந்த அணிக்காக கோல் அடிக்க, 11-ஆவது நிமிஷத்தில் எட்மண்ட் லால்ரிண்டிகா அதை 2-ஆக அதிகரித்தாா்.

தொடா்ந்து 22-ஆவது நிமிஷத்தில் அவரே ஈஸ்ட் பெங்கால் கோல் கணக்கை 3-ஆக உயா்த்தினாா். இந்நிலையில், மோகன் பகான் தரப்பில் மன்வீா் சிங் 33-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் ஸ்கோா் செய்தாா்.

ஈஸ்ட் பெங்காலுக்காக மீண்டும் எட்மண்ட் 44-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, முதல் பாதியை அந்த அணி 4-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் மோகன் பகானுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த ஈஸ்ட் பெங்கால், முடிவில் அதே கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments