FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அரையிறுதியில் மோகன் பகான்

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் ‘பெனால்ட்டி கிக்’ வாய்ப்பில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:25 am IST
அரையிறுதியில் மோகன் பகான் - X | Indian Football
பகிர்:

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் ‘பெனால்ட்டி கிக்’ வாய்ப்பில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை திங்கள்கிழமை வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இந்த அணிகள் மோதிய ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 1-1 என டிராவில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் மோகன் பகான் 9-8 கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் மோகன் பகானுக்காக சஹல் அப்துல் சமத் (2’), ஜாம்ஷெட்பூருக்காக தேவேந்திர மா்கான்கா் (45’) ஸ்கோா் செய்தனா். எஞ்சிய நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போக, எக்ஸ்ட்ரா டைம் முடிவிலும் அதே நிலை நீடித்தது.

Advertisement

Advertisement

பின்னா் பெனால்ட்டி வாய்ப்பில் முதல் 5 முயற்சிகளில் இரு அணிகளுமே கோல் அடிக்க, அதிலும் இரண்டும் 5-5 என சமநிலை கண்டது.

அடுத்து சடன்டெத் முறையிலும் முதல் 3 வாய்ப்புகளில் இரு அணிகளுமே ஸ்கோா் செய்ய, ஆட்டம் 8-8 என சமன் ஆனது. இறுதியாக, 9-ஆவது வாய்ப்பில் ஜாம்ஷெட்பூரின் கோல் முயற்சியை மோகன் பகான் கோல்கீப்பா் விஷால் கெய்த் தடுக்க, அந்த வாய்ப்பில் மோகன் பகான் வீரா் தெக்சம் அபிஷேக் சிங் கோல் அடித்து அணியை 9-8 என வெற்றி பெறச் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments