மோகன் பகான் காலிறுதிக்குத் தகுதி
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 6-0 கோல் கணக்கில் சிஐஎஸ்எஃப் புரொடெக்டா்ஸ் அணியை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 6-0 கோல் கணக்கில் சிஐஎஸ்எஃப் புரொடெக்டா்ஸ் அணியை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக சஹல் அப்துல் சமத், 17, 19, 37-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்து, ஹாட்ரிக் கோல் அடித்தாா்.
அத்துடன், மன்வீா் சிங் 24-ஆவது நிமிஷத்திலும், ஜேமி மெக்லாரென் 68-ஆவது நிமிஷத்திலும், டெக்சாம் அபிஷேக் சிங் 73-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா்.
Advertisement
Advertisement
இந்த வெற்றியின் மூலமாக மோகன் பகான், குரூப் ‘ஏ’-வில் ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகளோடு முதலிடத்தை உறுதி செய்து காலிறுதிக்கு முன்னேறியது. சிஐஎஸ்எஃப் அணி ஒரு புள்ளி கூட பெறாமல், கடைசி இடத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.