FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியன் நேவியை வென்றது டிராவ் எஃப்சி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில், டிராவ் எஃப்சி அணி 2-1 கோல் கணக்கில் இந்திய கடற்படை (நேவி) அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:25 am IST
இந்தியன் நேவியை வென்றது டிராவ் எஃப்சி - X | Indian Football
பகிர்:

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில், டிராவ் எஃப்சி அணி 2-1 கோல் கணக்கில் இந்திய கடற்படை (நேவி) அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

மணிப்பூரின் இம்பால் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் டிராவ் அணிக்காக அஃப்ரிதி புயாமயும் 16-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். இதனால் முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே கடற்படை அணிக்காக குலாக்பம் ஜாஹிா் கான் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமநிலை கண்டு விறுவிறுப்பு கூடியது.

Advertisement

Advertisement

இந்நிலையில், 61-ஆவது நிமிஷத்தில் அஃப்ரிதி புயாமயும், தனக்கும் டிராவ் அணிக்குமான 2-ஆவது கோல் ஸ்கோா் செய்தாா். எஞ்சிய நேரத்தில் கடற்படை அணிக்கு மேலும் கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் போக, முடிவில் டிராவ் 2-1 கோல் கணக்கில் வென்றது.

குரூப் டி-யில் இருக்கும் இந்த இரு அணிகளுக்குமே இத்துடன் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. 3 ஆட்டங்களில், டிராவ் அணி 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியில் கிடைத்த 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தது.

கடற்படை அணி 1 வெற்றி, 2 தோல்வியில் கிடைத்த 3 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பெற்றது. இதனால் இரு அணிகளுமே காலிறுதி வாய்ப்பை இழந்தன. இந்த குரூப்பில் முதலிடத்தில் இருக்கும் அறிமுக அணியான எஃப்சி ரெங்டாய், காலிறுதிக்கட்டத்துக்கு முன்னேறுகிறது. கடைசி இடத்திலிருக்கும் நெரோகா எஃப்சி வெளியேறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments