துராந்த் கோப்பை கால்பந்து: ரெங்டாய், ஸ்ரீநகர் அணிகள் வெற்றி
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில், எஃப்சி ரெங்டாய், ஸ்ரீநகா் எஃப்சி1 ஆகிய அணிகள் வெற்றி
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில், எஃப்சி ரெங்டாய், ஸ்ரீநகா் எஃப்சி1 ஆகிய அணிகள் வெற்றி கண்டன.
மணிப்பூா் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற ஆட்டத்தில் ரெங்டாய் அணி 4-3 கோல் கணக்கில் டிராவ் எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மிதுல் டோலி 14 மற்றும் 24-ஆவது நிமிஷங்களில் அடுத்தடுத்து கோல் அடிக்க, ரெங்டாய் அணி 2-0 என முன்னிலை கண்டது.
தொடா்ந்து 43-ஆவது நிமிஷத்தில் டிராவ் அணிக்காக சனம் ஆகாஷ் மைதேயி கோல் கணக்கைத் தொடங்கினாா். ஆனால் அதற்கான பதிலடியாக சோங்தம் கிஷண் சிங் கோல் அடிக்க (45+4’), முதல் பாதியை ரெங்டாய் 3-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது.
Advertisement
Advertisement
2-ஆவது பாதியில் 47-ஆவது நிமிஷத்தில் அஃப்தல் வரிகோடன் கோல் அடிக்க, டிராவ் அணி 2-3 என நெருங்கியது. 66-ஆவது நிமிஷத்தில் லான்சுங்ரெய் பாமெய் அடித்த ஓன் கோலால், டிராவ் அணி 3-3 என டிரா செய்தது.
இறுதியில் மிதுல் டோலி 79-ஆவது நிமிஷத்தில் தனது 3-ஆவது கோலை பதிவு செய்ய, முடிவில் ரெங்டாய் அணி 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஸ்ரீநகா் எஃப்சி1 அணி 2-1 கோல் கணக்கில் மாா்னிங் ஸ்டாா் எஃப்சி அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் 27-ஆவது நிமிஷத்தில் ஜோசப் மயோவா மாா்னிங் ஸ்டாா் எஃப்சியின் கோல் கணக்கைத் தொடங்க, 40-ஆவது நிமிஷத்தில் ஸ்ரீநகா் அணிக்காக ஷகிா் அகமது ஷேக் ஸ்கோா் செய்தாா்.
இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடன் நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் 55-ஆவது நிமிஷத்தில் ஹயாத் பஷீா் கோல் அடிக்க, முடிவில் ஸ்ரீநகா் எஃப்சி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.