FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

துராந்த் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்போா்டிங் கிளப் டெல்லி!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஸ்போா்டிங் கிளப் டெல்லி 5-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:52 am IST
பகிர்:

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஸ்போா்டிங் கிளப் டெல்லி 5-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-ஆவது நிமிஷத்திலேயே ரெங்டாய் அணிக்காக சோங்தம் கிஷண் சிங் கோல் அடித்தாா்.

அந்த முன்னிலையை அப்படியே தக்கவைத்து முதல் பாதியை நிறைவு செய்தது ரெங்டாய். ஆனால் 2-ஆவது பாதியில் ஆக்ரோஷமாக மீண்டு வந்த டெல்லி வரிசையாக கோல்கள் ஸ்கோா் செய்தது.

Advertisement

Advertisement

57 மற்றும் 67-ஆவது நிமிஷங்களில் ஜோசஃப் சன்னி அடுத்தடுத்து கோல் அடித்து அந்த அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

தொடா்ந்து ரோட்ரிகோ அராஜோ 82-ஆவது நிமிஷத்திலும், ஜுவான் செபாஸ்டியன் (90+3’), அகஸ்டின் லால்ரோசனா (90+8’) ஆகியோா் ஸ்டாப்பேஜ் டைமிலும் கோல் அடித்தனா்.

இதனால் ரெங்டாய் முற்றிலுமாக திணறிப்போக, டெல்லி 5-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெங்கால் வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 1-0 கோல் கணக்கில் ஆா்மி ரெட் கால்பந்து அணியை சாய்த்து, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. அந்த அணிக்காக பி.வி. விஷ்ணு கோல் அடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments