FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டிஃபெண்டர்ஸ் எஃப்சியை சாய்த்தது எஸ்சி டெல்லி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் ஸ்போர்டிங் கிளப் டெல்லி அணி 7-0 கோல் கணக்கில் இலங்கை ராணுவ அணியான டிஃபெண்டர்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 8:00 am IST
- SWAMINATHAN
பகிர்:

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் ஸ்போர்டிங் கிளப் டெல்லி அணி 7-0 கோல் கணக்கில் இலங்கை ராணுவ அணியான டிஃபெண்டர்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

டெல்லி அணிக்காக ரோட்ரிகோ அராஜோ 5 கோல்கள் (6', 8', 12', 89', 90+5') அடித்து அசத்த, முகமது அய்மின் (34'), ஜுவான் செபாஸ்டியன் (90+2') ஆகியோரும் ஸ்கோர் செய்தனர். இதனிடையே, கொல்கத்தாவில் 24-ஆவது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 5-0 கோல் கணக்கில் செளத் யுனைடெட் எஃப்சியை வென்றது. அந்த அணிக்காக டேனியல் ரமிரெஸ் (7'), முகமது பாசிம் (24'), ஹர்திக் பாட் (73'), பிபின் சிங் (81'), டேவிட் லாலன்சங்கா (90+5') ஆகியோர் கோல் அடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments