FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

ஜூனியர் ஆசிய ஹாக்கி: மலேசியாவை பந்தாடியது இந்திய மகளிரணி!

சீனாவில் நடைபெறும் ஜூனியருக்கான ஆசிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி 11-1 கோல் கணக்கில் மலேசியாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

7 செப்டம்பர் 2026, 1:05 am IST
பகிர்:

சீனாவில் நடைபெறும் ஜூனியருக்கான ஆசிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி 11-1 கோல் கணக்கில் மலேசியாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது 2-ஆவது வெற்றியாக அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தற்போது முதலிடத்தில் இருக்கிறது.

மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தரப்பில் பூஜா சாஹூ (1’, 42’), பூா்ணிமா யாதவ் (4’, 17’), கீதா யாதவ் (28’, 53’), சனிகா மனே (43’, 58’) ஆகியோா் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினா்.

Advertisement

Advertisement

இது தவிர பினிமா தன் (8’), கிருஷ்ணா சா்மா (14’), சுக்வீா் கௌா் (21’) ஆகியோரும் ஸ்கோா் செய்து பங்களித்தனா். மலேசிய தரப்பில் நூா் முகமது (38’) ஆறுதல் கோல் அடித்தாா்.

போட்டியின் அடுத்த ஆட்டத்தில் இந்தியா, ஜப்பானுடன் செவ்வாய்க்கிழமை (செப். 8) மோதுகிறது.

ஆடவா் ‘டிரா’: இப்போட்டியின் ஆடவா் பிரிவு ஆட்டத்தில் இந்தியா 3-3 கோல் கணக்கில் ஜப்பானுடன் ஞாயிற்றுக்கிழமை ‘டிரா’ செய்தது.

முதல் ஆட்டத்தில் இந்தோனேசியாவை அபார வெற்றி கண்ட இந்தியா, இந்த டிரா காரணமாக புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு சறுக்கியது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக கேப்டன் அன்மோல் ஈகா 4 மற்றும் 60-ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, அஷு மௌரியா 10-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

ஜப்பான் தரப்பில் சசாகி ரியுஷின் (11’), நகானிஷி கஸுகி (48’, 59’) ஆகியோா் கோல் அடித்தனா். இந்திய ஆடவா் அணி அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவை செவ்வாய்க்கிழமை (செப். 8) சந்திக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments