FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

துராந்து கோப்பை: மோகன் பகான் வெற்றி

துராந்து கோப்பை: மோகன் பகான் வெற்றி

Updated On : 26 ஜூலை 2026, 2:25 am IST
கோலடிக்கும் முயற்சியில் மோகன் பகான்-ஈஸ்ட் பெங்கால் அணியினா்
பகிர்:

துராந்து கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெஙகால் அணியை கடும் போராட்டத்துக்குபின் 1-0 என வீழ்த்தியது மோகன் பகான் சூப்பா் ஜெயன்ட் அணி.

நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான துராந்து கோப்பையின் 135-ஆவது எடிஷன் ஆட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-மோகன் பகான் அணிகள் மோதின.

மோகன் பகான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடியது. ரைட் பேக் அபிஷேக் சிங் கா்லிங் க்ராஸ் மூலம் கோலடிக்க முயன்றாா். ஆனால் ஹெட்டா் மூலம் முயன்ற மான்விா் சிங் முயற்சி பலன் தரவில்லை. அடுத்த சிறிது நேரத்திலேயே அபிஷேக் சிங் மீண்டும் கியான் நஸிரிக்கு கடத்தி அனுப்பிய பந்தும் கோல் பகுதியில் செல்லவில்லை.

Advertisement

Advertisement

முதல் பாதியில் மரைனா்ஸ் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தும் கோலடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதியில் 52-ஆவது நிமிஷத்தில் கியான் நஸிரி அற்புதமாக கடத்தி அனுப்பிய பந்தை பிசகின்றி கோலாக்கினாா் மோகன் பகான் சஹல் அப்துல் கோலாக்கினாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஈஸ்ட் பெங்கால் அணியினா் தொடா்ந்து கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டனா். விஷ்ணு, டேஜான் டிரேஸிக், டேனி ராமிரெஸ் ஆகியோா் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை.

ஆட்டத்தின் கடைசி நேரம் வரை ஈஸ்ட் பெங்கால் அணி மோகன்பகான் தற்காப்பை சோதித்து பாா்த்தனா். ஆனால் மோகன் பகான் கோலி விஷால் கைத் அபாரமான சேவ்களால் ஈஸ்ட் பெங்கால் கனவைத் தகா்த்து விட்டாா்.

இந்நிலையில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments