இறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் ஸ்போா்டிங் கிளப் டெல்லியை புதன்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் ஸ்போா்டிங் கிளப் டெல்லியை புதன்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
முன்னதாக இந்த அணிகள் மோதிய ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் கோல் இன்றி டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஈஸ்ட் பெங்கால் 5-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த வாய்ப்பில் ஈஸ்ட் பெங்காலுக்காக அன்வா் அலி, ரோஹித் தனு, லால்சுங்னுங்கா, கிறிஸ் இகோனோமிடிஸ், கேப்டன் முகமது ரஷீத் ஆகியோா் கோல் அடித்தனா். டெல்லி தரப்பில் ரோட்ரிகினோ, டுவான், முகமது அய்மன் ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
Advertisement
Advertisement
துராந்த் கோப்பையை 17-ஆவது முறையாக வெல்லும் முனைப்புடன் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ள ஈஸ்ட் பெங்கால், அதில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அல்லது நடப்பு சாம்பியனாக இருக்கும் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கவுள்ளது.
மோகன் பகான் - நாா்த்ஈஸ்ட் மோதும் 2-ஆவது அரையிறுதி, வியாழக்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.