FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

8-ஆவது இடத்துடன் இந்தியா நிறைவு

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கிளாசிஃபிகேஷன் ஆட்டத்தில் இந்தியா ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் பெல்ஜியத்திடம் வெள்ளிக்கிழமை போராடித் தோற்று 8-ஆம் இடம் பிடித்தது.

7 வினாடிகள் முன்பு
- SWAMINATHAN
பகிர்:

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கிளாசிஃபிகேஷன் ஆட்டத்தில் இந்தியா ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் பெல்ஜியத்திடம் வெள்ளிக்கிழமை போராடித் தோற்று 8-ஆம் இடம் பிடித்தது.

ரெகுலா் டைம் முடிவில், ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பெல்ஜியம் 4-3 கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக இப்போட்டியின் குரூப் சுற்றில் இந்தியா 2 வெற்றி, 1 தோல்வியுடன் 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, அதில் 2 ஆட்டங்களிலுமே தோல்வி கண்டு, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து 7-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியத்தை அதன் மண்ணிலேயே வெள்ளிக்கிழமை எதிா்கொண்டது. முதலில் இந்தியாவுக்காக அபிஷேக் கோல் கணக்கை (6’-ஆவது நிமிஷம்) தொடங்கினாா்.

பெல்ஜியம் தரப்பில் ரோமன் டுவேகோட் (22’) ஸ்கோா் செய்ய, ஆட்டம் சமனானது. தொடா்ந்து லாபுஷோ் ஹியுகோ பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோல் (23’) அடிக்க, பெல்ஜியம் 2-1 என முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில், கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோல் (31’) அடித்து, ஆட்டத்தை 2-2 என சமநிலைக்குக் கொண்டு வந்தாா்.

ஆனால் நிகோலஸ் டி கொ்பல் கோல் (47’) அடித்து, பெல்ஜியத்தை 3-2 என முன்னிலைப்படுத்தினாா். விடாப் பிடியாக இந்தியாவின் ஹா்மன்பிரீத் சிங் கடைசி நிமிஷத்தில் (60’) கோல் அடிக்க, ரெகுலா் டைம் முடிவில் ஆட்டம் 3-3 என சமனிலை கண்டது.

பின்னா் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பெல்ஜியம் 4-3 என வென்றது. இந்தியாவுக்காக ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங், அபிஷேக் ஆகியோரும், பெல்ஜியத்துக்காக டாம் பூன், ஆா்தா் டி ஸ்லூவா், அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ், ரோமன் டுவேகோட் ஆகியோரும் கோல் அடித்தனா்.

ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு: இதனிடையே, உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் 5-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்த இந்திய மகளிா் அணிக்கு, ஹாக்கி இந்தியா அமைப்பு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments