FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பள்ளிக் கல்வி நிர்வாகச் சீரமைப்பின் குளறுபடிகளை களையக் கோரி ஆர்ப்பாட்டம்

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக சீரமைப்பில் உள்ள குளறுபடிகளை களையக் கோரி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 8 ஜூன் 2018, 12:41 am IST
பகிர்:

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக சீரமைப்பில் உள்ள குளறுபடிகளை களையக் கோரி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சிவராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.டி.பாபு அறிமுக உரையாற்றினார். மாவட்ட தணிக்கையாளர் எ.கோபிநாதன் வரவேற்றார். 
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினருமான செ.நா. ஜனார்த்தனன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாவட்ட தொடர்பாளருமான க. சரவணராஜ், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எஸ். ராஜேஸ்கண்ணா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் ஜி. கோபி, தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் ஈ. ராமன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்டத் தலைவர் வாரா, மாநில துணைச் செயலாளர் எஸ்.பி.வடிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் கலந்தாய்வு நெறிமுறைகளில் உள்ள குளறுபடிகளை களைந்து, பணிநிரவல்களை ரத்து செய்த பின் கலந்தாய்வு நடத்த வேண்டி வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் எஸ்.குமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments