டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 14 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 14 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆற்காட்டை அடுத்த சாத்தூர் இணைப்பு சாலை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையின் விற்பனையாளர் காவனூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (45), புதன்கிழமை பகல் 12 மணி அளவில் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே கடையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் ரூ. 6ஆயிரம், ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த திமிரி போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.