தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்
சமூக நீதிப் போராட்டத்தை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர், காட்பாடியில் பாமகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக நீதிப் போராட்டத்தை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர், காட்பாடியில் பாமகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநிலத் துணைச் செயலர் இளவழகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. சண்முகம், மாவட்டச் செயலர் வெங்கடேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, சமூக நீதிப் போராட்டத்தை இழிவுபடுத்தி பேசிய தமிழிசை சௌந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் சிறப்பு மாவட்டச் செயலர் துளசிராமன் தலைமை வகித்தார். தொகுதி அமைப்புச் செயலர் தாமோதரன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர் சரவணன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். இதில் கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம், ஜூன் 28: அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ப.ஜெகந்நாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் சி.ஜி.ராமசாமி முன்னிலை வகித்தார். நகரச் செயலர் கே.எம்.ரமேஷ்பாபு வரவேற்றார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் க.சரவணன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்டச் செயலர் அ.ம.கிருஷ்ணன், மாநில இளைஞர் அணி செயலர் ச.தீனதயாளன், மாநில மாணவர் அணி செயலர் ப.பிரபு, தலைமை நிலையப் பேச்சாளர் தம்பிஏழுமலை, மாவட்ட வன்னியர் சங்கச் செயலர் கோ.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் இ.தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெமிலியில்... நெமிலி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் அ.ம.கிருஷ்ணன் தலைமை வகித்தார். நெமிலி நகரச் செயலர் சண்முகம் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர் க.சரவணன், மாநில இளைஞரணி செயலர் ச.தீனதயாளன், மாநில இளைஞரணி துணைச் செயலர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலர் மா.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் வடக்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர்கள் சஞ்சீவிராயன், அருண்குமார், சிறப்புச் செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமைத் தாயகம் அமைப்பின் மாவட்டத் தலைவர் டீ.டி. மகேந்திரன் வரவேற்றார்.
மாநிலத் துணைத் தலைவர் எம்.கே.முரளி, மாவட்டச் செயாளர் கோ.கரிகாலன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ ஆகியோர் பேசினர்.
முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் மணி, சுரேஷ், ஏ.வி.டி பாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டப் பொருளாளர் அமுதாசிவா நன்றி கூறினார்.
வாலாஜாபேட்டையில்...
வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கரிகாலன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.கே.முரளி உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூரில்...
வேலூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவர் ஜி.பொன்னுசாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கிருபாகரன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைப் பொது செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான டி.கே.ராஜா ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.