FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆற்காடு பள்ளியில் 1,008 பசுமை விநாயகர் விழா

ஆற்காடு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் மகாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1,008 பசுமை விநாயகர் விழா மற்றும் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆற்காடு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் மகாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1,008 பசுமை விநாயகர் விழா மற்றும் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளைத் தலைவர் பாலாஜி லோகநாதன், பள்ளி முதல்வர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சாந்தி வரவேற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட 1,008 பசுமை விநாயகர் சிலைகளுக்கு சென்னை சீனிவாச குருக்கள் தலைமையில் மாணவர்கள் சிறப்பு பூஜை செய்தனர். 
விழாவில், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவர் ஜெ.லட்சுமணன், இயற்கை ஆர்வலர்கள் கே.எம்.பாலு, ஏ.எம் .உதயசங்கர், ஸ்தபதி தங்கராஜ், அறக்கட்டளைப் பொருளாளர் பா.கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments