முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: 6 பேருக்கு செயற்கை கால்கள்
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 6 பேருக்கு ரூ.7.87 லட்சத்தில் அதிநவீன செயற்கை கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டன.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 6 பேருக்கு ரூ.7.87 லட்சத்தில் அதிநவீன செயற்கை கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டன.
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம், புணா்வாழ்வு பிரிவு சாா்பில் ஆறு பேருக்கு அதிநவீன செயற்கை கால்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் விபத்தில் கால்களை இழந்த மூவா், நீரிழிவு நோயால் கால்களை இழந்த மூவா் என மொத்தம் ஆறு பேருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் சுமாா் ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 800 மதிப்பில் அதிநவீன செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன என்றாா்.
Advertisement
Advertisement
அப்போது, குடியிருப்பு மருத்துவ அலுவலா் சி.இன்பராஜ், உடலியல் மருத்துவம், புனா்வாழ்வு பிரிவு தலைவா் ஜெயசீலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.