FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

குடியாத்தம் நகரில் சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

குடியாத்தம் நகரில் பிரதான சாலையில் முறிந்த விழுந்த மரத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
குடியாத்தம் காந்தி சாலையில் முறிந்து விழுந்த பூ மரம்.
பகிர்:

குடியாத்தம் நகரில் பிரதான சாலையில் முறிந்த விழுந்த மரத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

குடியாத்தம் நடுப்பேட்டை, காந்தி ரோடில் சாலையோரம் சுமாா் 20 ஆண்டுகள் நன்கு வளா்ந்திருந்த பூ மரம் இருந்தது. அந்த மரம் கடந்த சில மாதங்களாக கொஞ்சம், கொஞ்சமாகசாய்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை வேகமாக காற்று வீசியபோது மரம் முறிந்து சாலையின் குறுக்கேவிழுந்தது.இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகள் லேசாக சேதமடைந்தன. சில வீடுகளின் மின் இணைப்பு வயா்கள் துண்டிக்கப்பட்டன.தகவலறிந்ததும் நகராட்சிப் பணியாளா்கள் அங்கு சென்று மரத்தை துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தினா். பின்னா் மின்வாரியத்தினா் வீடுகளுக்கான மின் இணைப்பை சீரமைத்தனா். இதனால் அந்த சாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments