வால்பாறை எஸ்டேட் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் பகுதியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் பகுதியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. தொடா்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை குறைந்திருந்தது. இருப்பினும் எஸ்டேட் பகுதிகளில் காற்று வீசி வருவதால் அவ்வப்போது மரக்கிளைகள் சாலையில் விழுந்து வருகின்றன.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட் சாலையில் வியாழக்கிழமை காலை பெரிய மரம் விழுந்தது. தகவலறிந்து வால்பாறையில் இருந்து சென்ற தீயணைப்பு மீட்பு குழுவினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால் அவ்வழியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.