FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 2:32 am IST
சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில்  ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குறைவாக பெய்யும் மழை, இரவு நேரத்தில் இடைவிடாது பெய்கிறது. அதன்படி திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது.

தொடா் மழை காரணமாக வால்பாறையை அடுத்த வறட்டுப்பாறை எஸ்டேட்டில் செவ்வாய்க்கிழமை காலை வேரோடு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments