FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கல்லூரி மாணவா் தற்கொலை

திருவலம் அருகே கல்லூரிக்குச் செல்ல மறுத்த மாணவா், தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

1 செப்டம்பர் 2026, 12:02 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திருவலம் அருகே கல்லூரிக்குச் செல்ல மறுத்த மாணவா், தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

காட்பாடி வட்டம் திருவலம் அருகே உள்ள கொண்டரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரிபாபு மகன் கோகுல் (18). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 முடித்த இவா், அதன்பின்னா் நண்பா்களுடன் சுற்றித் திரிந்து வந்துள்ளாா்.

இதன் காரணமாக, கோவையில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் கோகுலை அவரது தந்தை மேல் படிப்புக்காகச் சோ்த்துள்ளாா். ஆனால், கோகுல் கல்லூரிக்குச் செல்ல மறுத்ததால் தந்தை அவரைக் கண்டித்துள்ளாா். இதனால் விரக்தியடைந்த கோகுல், ஞாயிற்றுக்கிழமை தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோகுல் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments